வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்துக்கு சொந்தமான (கிங்ஸ்டன்) பொறியியல் கல்லூரியில் நேற்று முன்தினம் (03.01.2025) முதல் இன்று (05.01.2025) நள்ளிரவு 02:30 மணி வரை மூன்றாவது நாளாக தொடர்ந்து 44 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நிறைவு. மொத்தம் எட்டு கார்களில் வந்திருந்த 18 அமலாக்கத்துறை அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே கடந்த 3ம் தேதி இரவு எஸ்.பி.ஐ வங்கி வாகனத்தோடு துப்பாக்கி ஏந்திய காவலர்களோடு வங்கி ஊழியவர்கள் வரவழைக்கப்பட்டு இரவு 10 மணி அளவில் வெளியே சென்றுள்ளது. அதில் கணக்கில் வராத ரொக்கப்பணம் பறிமுதல் செய்து எடுத்து சென்றதாகவும். அது அமலாக்கத்துறை கணக்கில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல். மேலும் கல்லூரி தொடர்பான முக்கிய ஆவணங்கள், கணிணியின் ஹார்ட் டிஸ்க்கள், வாங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்து எடுத்து சென்றதாக தகவல்.
இச்சோதனையின் போது கல்லூரியின் அனைத்து சிசிடிவி கேமிராக்களையும் அமலாக்கத்துறையினர் காட்டுப்பாட்டில் வைத்து கண்காணித்தனர். பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 2 கோடி பணம் கல்லூரியில் இம்மாதம் 7 ம் தேதி ஊழியர்களுக்கு சம்பளம், இந்த மாதம் பொங்கல் போனஸ் வழங்க இருந்த பணம் என்றும், மாணவர்கள் பல்வேறு வகையில் செலுத்திய கட்டணம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் திமுக எம்.பி கதிர்ஆனந்தின் தந்தையும், அமைச்சர் மற்றும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் இரவு 10:10 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். சுமார் நான்கரை மணி நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை முடித்துக்கொண்டு நள்ளிரவு 2:35 மணிக்கு எட்டு காரில் ல் 18 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் துணை ராணுவ படையினர், கணக்கில் வராத பணம், கல்லூரி தொடர்பான முக்கிய ஆவணங்கள், வங்கி ஆவணங்கள், கணினி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதாக தகவல்.
திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் டெல்லி புறப்பட்டுச் சென்ற நான்கரை மணி நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.