Published on 04/12/2019 | Edited on 04/12/2019
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை, பவானி சாகர் அணை, பேச்சிப்பாறை அணை, உள்ளிட்ட பல்வேறு அணைகளும், மதுராந்தகம், வீராணம் உள்ளிட்ட பல ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,500 கனஅடியில் இருந்து 8,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. மேலும் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருக்கிறது.