Skip to main content

"கிரிக்கெட் மைதானத்தை சர்வதேச அளவில் புகழ்பெற செய்ய வேண்டும்"- முதல்வர் பழனிசாமி பேச்சு!

Published on 09/02/2020 | Edited on 09/02/2020

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள காட்டு வேப்பிலைப்பட்டியில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை தமிழக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். 

salem district international cricket stadium cm palanisamy speech

சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் 2 லட்சத்து 5 ஆயிரம் சதுர அடியில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் மற்றும் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜு, செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

salem district international cricket stadium cm palanisamy speech

விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, "புதிய கிரிக்கெட் மைதானத்தை இளைஞர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் தங்கள் திறமை மூலம் புதிய கிரிக்கெட் மைதானத்தை சர்வதேச அளவில் புகழ்பெற செய்ய வேண்டும். ஆரோக்கியமான வாழ்வு வேண்டுமென்றால் விளையாட்டில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்." இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

salem district international cricket stadium cm palanisamy speech

அதனைத் தொடர்ந்து பேசிய பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன், "சேலத்தில் திறக்கப்பட்ட மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும்" என்றார். இதற்கு முதல்வர் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என அறிவித்தது மகிழ்ச்சி; அரசு தேவையான உதவிகளை வழங்கும் என்று கூறினார். 

அதன்பிறகு புதிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பந்துவீச முதல்வர் பழனிசாமி பேட்டிங் செய்து மகிழ்ந்தார். 



 

சார்ந்த செய்திகள்