கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை திருச்சியில் தொடர்ச்சியாக ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ கல்லூரி மாணவர்களிடமும், அரங்கு கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார். அந்த வகையில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இஸ்லாமும், தமிழும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய வைகோ மாணவர்களை பார்த்து தம்பிகளே என்று கூறிய அவர், பின்னர் திடீரென மாணவர்களை தம்பிகளே என்று அழைக்க கூடாது என்று கருதி, தனக்கு வயது அதிகம் என்றும் தங்கள் வயதில் தனக்கு பேரன் இருப்பதாகவும் கூறினார்.

உ.பி மாநிலத்தில் காந்தி நினைவு நாளில் அவருடைய உருவபொம்மையை தீயிட்டு எரிப்பதாகவும், துப்பாக்கியால் சுட்டு முழக்கங்களை எழுப்பியும் காலில் போட்டு மீதித்தும் அவமானப்படுத்தியவர்களுக்கு ஆட்சியாளர்கள் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கும் போது அவர் குரல் உடைந்து தடுமாறி கண்ணீர் விட ஆரம்பித்தது. அங்கே இருந்த மாணவர்களிடம் பெரிய அமைதியை ஏற்படுத்தியது.
தோல்வியை பற்றி பேசுவதற்கு எனக்கு முழு தகுதி உள்ளது. ஏனெனில் அதிக தோல்விகளை சந்தித்தவன், நான் அரசியலில் தோற்றுள்ளேன், ஆனால் என் வாழ்வில் தோல்வியே கிடையாது. "நான் ஓர் போராளி, எனக்கு தோல்வியே கிடையாது. ஜனநாயகத்தை காப்பாற்ற, இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகவும், நாட்டின் மதச்சார்பின்மையை நிலைநாட்டவும் தொடர்ந்து போராடி வருகிறேன்.
மதச்சார்பின்மையை காக்கும் வரை எங்கள் வாள் உறைக்குள் போகாது. நான் இன்னும் சில ஆண்டுகள் மட்டும்தான் உயிருடன் இருப்பேன். ஆனால் வாழும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பேன், என்றார்.

இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே தான் உயிருடன் இருப்பேன் என்றும் வைகோ தெரிவித்தார். வாழும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பேன் , இளைஞர்களை அரசியலுக்கு அழைக்க வில்லை. ஆனால் நாட்டின் எதிர்காலத்தை இளைஞர் தான் காப்பாற்ற வேண்டும். எனவே தான் அவர்களுக்கு வரலாற்றை எடுத்து கூறுகிறேன். உலகின் முதல் மொழி தமிழ் மொழி அதை காக்க ரத்தம் சிந்திய மாநகரம் திருச்சி என்று பேசினார்.
கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் இஸ்மாயில் முகைதீன், தலைமை வகித்தார். செயலாளர் காஜா நஜீமுதீன், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் முன்னிலை வகித்தனர். வைகோ அவர்கள் மனைவி மற்றும் திருச்சி மகப்பேரு மருத்துவர் மாநில மகளிர் அணி செயலாளர் ரொகையா, மாவட்ட செயலாளர்கள் சேரன் மற்றும் சோமு உள்ளி கட்சியினரும் ஏராளமான கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.