![rajini](http://image.nakkheeran.in/cdn/farfuture/NSTngpl0VOAjuffHIFRkQGNKWtHAUi3O0Zja_AVJJL4/1542729796/sites/default/files/inline-images/132_2.jpg)
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கிய கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இன்னும் பல கிராமங்கள் மீளமுடியாத நிலையில் பெரும் துயரை சந்தித்து வருகிறது. கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளால் தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கஜா புயல் பாதிப்பால் 46 பேர் உயிரிழந்த நிலையில் நிவாரண பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
குறிப்பாக நாகை மற்றும் வேதாரண்யத்தில் அதன் பாதிப்பும் அதிகமாக உள்ளதால் அதிகமாக சேதமடைந்த பகுதிகளுக்கு அமைச்சர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு நிவாரண நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவெடுத்து பணிகளை தொடங்கியுள்ளது. இந்நிலையில் திரைத்துறையை சேர்ந்த நடிகர்களும் பாதித்த மக்களுக்கு நிவாரண தொகை மற்றும் பொருட்களை கொடுத்து உதவி வருகின்றனர். நடிகர் சூர்யா குடும்பத்தினர் 50 லட்சமும், நடிகர் விஜயசேதுபதி 25 லட்சமும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கஜா புயலால் பதித்த பகுதிகளின் நிவாரணத்திற்காக 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய நிவாரண பொருட்களை ரஜினி மக்கள் மன்றத்தின் மூலம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.