Published on 03/10/2019 | Edited on 03/10/2019
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணனிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டது.
பிளாஸ்டிக் தடையை தொடர்ந்து அஜினமோட்டோ தடை செய்யப்படுமா?
முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலனை நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும்.
மகாபலிபுரம் அருகே அஜினாமோட்டாவை தயாரிப்பதற்கெனவே ஒரு தொழிற்சாலை உள்ளதே?
அந்த தொழிற்சாலையை நாங்கள் இன்னும் தடை செய்யவில்லை. முதல்வருடன் கலந்து ஆலோசித்து என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அது நிறைவேற்றப்படும் என்றார்.
செயற்கை சுவையூட்டியான அஜினமோட்டோ புற்றுநோய் போன்ற உடல்பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.