
6 மாதத்துக்கு முன்பு வரை வேலூர் மாவட்டத்தில் பரவலாக தினமும் 5 கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாக வழக்குகள் பதிவாகின. கடந்த சில மாதங்களாக வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு வழக்குகள் தான் பதிவாகின. இந்நிலையில் தற்போது மீண்டும் வீடுகளில் கைவரிசை காட்ட தொடங்கிவிட்டார்களோ என எண்ணத்தோன்றுகிறது.
ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் என்கிற கிராமத்தில் அஸ்லாம்பாஷா என்பவர் வீடு உள்ளது. குடும்பத்துடன் நிகழ்ச்சி ஒன்றுக்காக வீட்டை பூட்டிவிட்டு ஆகஸ்ட் 9-ந்தேதி வெளியூர் சென்றுள்ளார். இன்று ஆகஸ்ட் 11ந்தேதி காலை தான் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளனர். வீட்டை திறந்துக்கொண்டு உள்ளே சென்றபோது ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியாகினர். வீட்டுக்குள் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 23 சவரன் தங்கநகை, 85 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதுப்பற்றி அஸ்லாம்பாஷா உடனடியாக உமராபாத் காவல்நிலையத்தில் புகார் தந்தார். புகாரை பெற்ற போலிஸார் சம்பவயிடத்துக்கு வந்து கைரேகைகள் பதிவு செய்துக்கொண்டனர். அதோடு எந்த தன்மையில் போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 6ந்தேதி இதைப்போல் வாணியம்பாடி முன்னால் எம்.எல்.ஏ மறைந்த அப்துல்சமத் வீட்டில் இருந்து 50 சவரன் தங்கநகை, 4 லட்சம் பணத்தை திருடிச்சென்றனர். அந்த வழக்கிலும் திருடர்கள் இதுவரை பிடிப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்களின் வீடுகளாக பார்த்து திருடு போவதைக்கண்டு முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் மீண்டும் திருடர்கள் கைவரிசை தொடங்கிவிட்டதோ என அதிர்ச்சியாகிவுள்ளனர்.