
ஆறாயிரம் பேர் கலந்துகொண்ட பசுமை ஒட்டம் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
உலகம் முழுவதும் பசுமையை நோக்கி செல்வதற்கு அனைத்து அமைப்புகளும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பசுமை ஒட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஏசியன் பெயிண்ட் நிறுவனத்தின் சார்பில் ஐந்து மற்றும் பத்து கிலோமீட்டர் ஒட்டப்பந்தயம் ஆண்கள் பெண்களுக்கென நான்கு பிரிவுகளில் நேரு ஸ்டேடியத்தில் போக்குவரத்து துணை ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. இந்த பசுமை ஒட்டத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த பசுமை ஒட்டம் நாம் அனைவரும் இயற்கையை பாதுகாக்கும் வண்ணம் மரம் நடுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், சுற்றுச்சூழல் மாசுபாடு அடையாமல் பாதுகாத்தல், கழிவு நீர் சுத்திகரித்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தல் போன்ற நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பசுமை ஒட்டத்தை நடத்தியதாக மேலாளர் ராஜ் வர்மன் தெரிவித்தார்.