Published on 18/12/2019 | Edited on 18/12/2019
இந்திய நாட்டின் தொழில் வணிகத்தை முற்றிலும் சீர்குலைவு செய்வதுதான் ஆன்லைன் வர்த்தகம். காய்கறி கடை முதல் பெட்டிக்கடை வரை சிறு, குறு தொழில் செய்வோரை நடுத்தெருவில் நிற்க வைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை படுகுழியில் தள்ளியுள் இந்த ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து நாடு முழுக்க வணிகர்கள் போராடி வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக ஈரோட்டில் 17. 12. 2019 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே மாபெரும் ஆர்பாட்டம் நடத்தினார்கள் வியாபாரிகள். ஈரோடு மாவட்ட அனைத்து வணிகர் சங்கம் மற்றும் வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் இந்திய அரசே ஆன்லைன் வர்த்தகத்தை உடனடியாக தடைசெய்.. சிறு, குறு வியாபாரிகள் வயிற்றில் அடிக்காதே என மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.