நடிகை ராஷ்மி கவுதம் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இரவு காரில் கன்சுவாகா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றபோது,அங்கம்புடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற சையத் அப்துல் மீது ராஷ்மி கவுதத்தின் கார் மோதியது. உடனே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்து நடந்தபோது அந்த பகுதியில் சிலர் கூடி நடிகை ராஷ்மி கவுதத்துடன் செல்பி எடுத்தனர். இது மோசமான செயல். வருத்தமாக இருக்கிறது என்று நடிகையே மனம் நொந்துசென்றார்.
இந்த சம்பவத்திற்கு பின்னர், ராஷ்மி கவுதம் வேகமாக காரை ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டது என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சொகுசு காரை பறிமுதல் செய்தனர். சாலையில் விளக்கு இல்லாததும், சையத் அப்துல் வேகமாக ஓடி வந்து சாலையை கடந்ததாலும்தான் விபத்து ஏற்பட்டது என்றும், தான் காரை ஓட்டவில்லை என்றும், டிரைவர்தான் ஓட்டி வந்தார் என்றும், அந்த கார் எனக்கு சொந்தமானதே இல்லை என்றும் ராஷ்மி கவுதம் கூறியதை அடுத்து போலீசார் டிரைவரை கைது செய்துள்ளனர்.