Published on 20/04/2020 | Edited on 20/04/2020
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை அடுத்த சேர்வைக்காரன் ஊரணியைச் சேர்ந்தவர் கருணாகரன். கொத்தனார் வேலை பார்க்கும் இவர், மதுபோதைக்கு அடிமையானவர். இவருக்கு மாலை ஆனால் போதும் சரக்கு சாப்பிடாவிட்டால் கையும் ஓடாது, காலும் ஓடாது. தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. வெளியேவும் குவார்ட்டர் ரூபாய் 600-க்கு விற்கபடுவதால், தாமே சரக்கு தயாரிப்பது என முடிவு செய்தார்.
இதற்காக வீட்டின் பின்புறத்தில், குக்கரில் சாராயம் காய்ச்சி உள்ளார். தகவலறிந்து வந்த போலீஸார் பாத்திரத்தோடு அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவர்கள் பாணியில் கொத்தனாரை 'கவனித்து' அனுப்பி உள்ளனர்.