இன்று காலை மருத்துவக் குழுவினருடன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதில் கரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஆலோசித்தார்.
இந்நிலையில், பொதுமுடக்கம் குறித்து அறிவிப்புகள் தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொதுமுடக்கம் நீட்டிப்பு குறித்து தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிடும் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் பொது முடக்கத்தை ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்வுகளுடன் ஜூலை 31 ஆம் தேதி நள்ளிரவு வரை பொது முடக்கம் நீக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஜூலை 5 ஆம் தேதி வரை முழு முடக்கம் தொடரும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் ஜூலை 5ஆம் தேதி வரை முழு முடக்கம் தொடரும், ஜூலை 5ஆம் தேதிக்கு பிறகு ஆறாம் தேதி முதல் கடந்த மாதம் 24ம் தேதி முன்பு அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் பொது முடக்கம் நீடிக்கும். அதேபோல் சென்னையில் ஜூலை 5 ஆம் தேதிக்கு பிறகு கடந்த 19ஆம் தேதிக்கு முன் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் பொது முடக்கம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.