கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிடுவது நல்லதல்ல என்று அம்மாநில முதல் அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படத்தை வரும் 7ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்த நிலையில், காலா திரைப்படத்தை கர்நாடகத்தில் வெளியிடக் கூடாது என்று சில கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதற்கு பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் அதிருப்தி தெரிவித்ததுடன், திரைப்படத்தை வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமி, கர்நாடகாவில் காலா படத்தை திரையிடுவத நல்லதல்ல. அப்படி அந்தப் படத்தை வெளியிட்டால் அதனால் ஏற்படும் விளைவுக்கு தயாரிப்பாளரே பொறுபேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், இப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நகல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் குமாரசாமி கூறியுள்ளார்.
காவிரி தொடர்பாக இரு மாநில அரசுகள், விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினி கூற வேண்டும் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், ரஜினிக்கு நிபந்தனை விடுத்துள்ளார்.