Published on 26/11/2018 | Edited on 26/11/2018

தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24ஆம் தேதி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மேடவாக்கத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்ட சத்யராஜ், பள்ளி மாணவ மாணவிகளுக்கு உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தந்தை பெரியார் மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் நினைவு நாளான டிசம்பர் 24ஆம் தேதி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும். ஒரு சாதாரண மனிதனாக எனது உணர்வுகளை இந்த அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறேன் என்றார்.