Published on 23/10/2020 | Edited on 24/10/2020
சென்னை நுங்கம்பாக்கத்தில், வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "அக்டோபர் 26, 27- ஆம் தேதிகளில் காற்றின் திசைமாறக்கூடும். தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை அக்டோபர் 28- ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது. அதேபோல், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா, ராயலசீமா கடற்பகுதியிலும் வட கிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றத்தில் கனமழை காரணமாக தண்ணீர் ஆறு போல சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.