Published on 02/03/2019 | Edited on 02/03/2019
தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கர்நாடகா பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தென் தமிழகத்தின் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.