![g](http://image.nakkheeran.in/cdn/farfuture/kCZHb0Nuzpe2V3Z7r3H_eUr8L-kA0NaO8vY8ib2vphc/1631787996/sites/default/files/inline-images/1234890_14.jpg)
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குப் பதியப்பட்டு, அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்றுவருகிறது. 35க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுவரும் நிலையில், சோதனை நடைபெறும் இடங்களில் அதிமுகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்த ரெய்டு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "வேலுர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிமுக தேர்தல் பணி செய்வதைத் தடுக்கும் நோக்கில் இந்த ரெய்டு நடத்தப்படுகிறது" என்றார்.
இந்நிலையில் இந்த ரெய்டு தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், "இந்த ரெய்டு உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றிபெறக் கூடாது என்ற நோக்கில் நடத்தப்படுகிறது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளது. தேர்தல் சமயத்தில் ஆடுகின்ற ஒரு நாடகமே தவிர, அதைத் தாண்டி வேறொன்றுமில்லை" என தெரிவித்துள்ளனர்.