நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் தம்பி என பொய்யாக கூறிக்கொண்டு, ஏழைகளுக்கு உதவி செய்யும் நடிகர் ராகவா லாரன்ஸ் மீது அவதூறு பரப்பும் சுரேஷ்காமாட்சி என்பவருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் என்று நேற்று சென்னை பெரியமேடு வெட்னரி காலேஜ் எதிரில், ஸ்ரீ பவானி பெரிய பாளையத்து அம்மன் ஆலயம் வாசலில் திருநங்கைகளின் கண்டன கூட்டம் நடைபெற்றது.
இது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..
என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள்... என் மீது அக்கறை உள்ள ஒரு சில மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப் பட்டேன்...அப்படி எதுவும் செய்யாதீர்கள்..பொறுமையை கடை பிடியுங்கள்... நாம் நமது வழியில் நல்லதை மட்டும் நினைப்போம்..நல்லதையே செய்வோம்.. அவர்கள் அவர்கள் வழியில் போகட்டும்..
எனக்கு ஒரு சின்ன பிரச்சனை என்றால் உடனே ஓடி வருகிற உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..
நான் மும்பையில் காஞ்சனா இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன்..படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம்..அது வரை அமைதி காப்போம்...கடவுள் நமக்கான நல்லதை செய்வார்..
நமக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கும் நாம் நல்லது நடக்க ஆண்டவனை பிரார்த்திப்போம்... நம்மை பற்றி புரிந்து கொள்ள ஆண்டவன் அருள் அவர்களுக்கு கிடைக்கட்டும்.’’என்று தெரிவித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் மீது நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பரப்புவதாக எழுந்த குற்றச்சாட்டு தேர்தலுக்கு சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியியதற்கு, ‘’ராகவா லாரன்ஸ் மீதும் அவரது தொண்டுகள் மீதும் நல்ல மதிப்பு வைத்திருக்கிறேன். என் கட்சியினர் அவர் மீது அவதூறு பரப்ப மாட்டார்கள். அப்படியே என் கட்சியினர் செய்திருந்தால் புரிதல் இல்லாமல் செய்திருப்பார்கள். அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்திருந்தார்.
சீமான் வருத்தம் தெரிவித்த பின்னரும் இந்த சர்ச்சை தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.