Skip to main content

எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்பட்டது!!

Published on 17/10/2018 | Edited on 17/10/2018
 Express Avenue closed !! Express Avenue closed !!

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ தண்ணீர் லாரி வேலை நிறுத்தம் மற்றும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம் போன்ற காரணங்களால் மூடப்பட்டுள்ளது என அந்நிறுவன நிர்வாகம் அறிவித்துள்ளது..

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மூடல்!

Published on 16/01/2022 | Edited on 16/01/2022

 

Chennai Kindi Children's Park closed!

 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.  நேற்று வண்டலூர் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பூங்காவை ஜனவரி 31ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை கிண்டி சிறுவர் பூங்கா  (ஜன.17)  நாளை முதல் மூடப்படுவதாக தெரிவித்துள்ள வன உயிரின காப்பாளர், நிலைமையை மதிப்பாய்வு செய்து அதற்கேற்ப பூங்காவை திறப்பது குறித்து முடிவு செய்யப்பட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

 

 

Next Story

அதிகரித்த கரோனா நோய் தொற்று... பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

Published on 02/08/2021 | Edited on 02/08/2021

 

Increased corona infection ... Devotees are not allowed in the famous temples

 

திருச்சி மாவட்டத்தில் தற்போது கரோனா நோய் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், திருச்சியில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருச்சி ஸ்ரீரங்கம் நுழைவாயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற பதாகைகளை வைத்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

மேலும் திருவானைக் கோவில், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், சமயபுரம் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் இன்றும் (02.08.2021) நாளையும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த காவிரிக் கரையோரங்களில் பொதுமக்கள் கூடாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.