பழங்குடியினர் (நரிக்குறவர்கள்) தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று கல்வி, வேலை வாய்ப்புகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கு சாதிச்சான்று பெறுவதே பெரிய பிரச்சனையாக உள்ளது.
![pudukkottai horse Palangudiyinar seer peoples road](http://image.nakkheeran.in/cdn/farfuture/Nk4bHmoc46S44sMT2VA_Fe4iCiFL2PXe4ZpP59Qvqi4/1580482516/sites/default/files/inline-images/pudukkottai9.jpg)
நாங்களும் சராசரி மனிதர்கள் என்பதை காட்டும் விதமாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அறிவொளி நகரில் வசித்து வரும் மக்கள் தரம் உயர வேண்டும் என்பதற்காக அறிவொளி காலத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த ஷீலாராணி சுங்கத், இந்த மக்களை மாற்றி நரிக்குறவர் காலனி என்பதை அறிவொளி நகராக மாற்றினார்.
![pudukkottai horse Palangudiyinar seer peoples road](http://image.nakkheeran.in/cdn/farfuture/I980wcvzDDENOz5bCQFwqMaIV3_RRV-NonVxc8kr9Eo/1580482527/sites/default/files/inline-images/pudukkottai8.jpg)
அதன் பிறகு கல்வி பயிலவும் செய்தனர். இங்குள்ள ஒரு உறவினர் வீட்டில் ஒரு பெண்ணுக்கு சடங்கு செய்ய பட்டுக்கோட்டையில் இருந்து வந்த மாமன் முறை உறவினர்கள் கீரமங்கலம் மெய்நின்ற நாதர் ஆலயத்தில் ஒன்று சேர்ந்து மேள தாளங்களுடன் பட்டாசுகள் வெடிக்க குதிரைகளில் ஏறி பின்னால் சீர்களுடன் பெண்கள் அணிவகுக்க பேருந்து நிலையம் கடைவீதி வழியாக 2 கி மீ ஊர்வலமாகச் சென்றனர்.