Skip to main content

கொப்பரை தேங்காய் கொள்முதல்; மத்திய அமைச்சருடன் வானதி ஸ்ரீநிவாசன் சந்திப்பு

Published on 26/08/2022 | Edited on 26/08/2022

 

vanathi srinivasan

 

கொப்பரை தேங்காய் கொள்முதலை மேலும் இரண்டு மாதங்கள் நீடிப்பதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங்க் தோமர்  தெரிவித்தாக பாஜக எம்.எல்.ஏ வானதி  ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். 

 

தென்னை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசின் விலை ஆதார திட்டத்தின் கீழ் கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்து கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்தது. இந்த திட்டத்தின் தொடக்கத்தில் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கொப்பரை தேங்காய் கிலோவிற்கு 103.35 ரூபாய்க்கு பெறப்பட்டது. 80 ரூபாய்க்கு விற்ற கொப்பரை தேங்காய் 103 க்கு வாங்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

இந்நிலையில் டெல்லியில் வேளாண் அமைச்சரை சந்தித்த வானதி ஸ்ரீநிவாசன், அமுல் கந்தசாமி மற்றும் பொள்ளாச்சி எம்.எல்.ஏ ஜெயராமன்  ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தென்னை  கொப்பரை தேங்காய் கொள்முதலை மேலும் இரண்டு மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். கோரிக்கையை ஏற்று விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு  மேலும்  இரண்டு மாதங்களுக்கு கொள்முதலை நீட்டிப்பதாக வேளாண் அமைச்சர் உறுதியளித்தார்" என  கூறினார். மேலும் ஒரு கிலோ கொப்பரைத் தேங்காய் விலையை  150 வரை உயர்த்துவது குறித்து முடிவெடுப்பதாகவும் கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்