இந்தியாவில் இயற்கை பேரிடர் நிகழும் காலத்தில் மத்திய அரசுடன் கைக்கோர்த்து பொதுமக்கள் பிரதமரின் நிவாரண நிதிக்கு (Prime Minister's National Relief Fund) நிதி உதவியை அளிக்கலாம். இதற்காக மத்திய அரசு இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது . இதற்கான இணையதள முகவரி : https://www.pmnrf.gov.in/payform.php ஆகும். இந்த இணையதளத்திற்கு சென்று பொதுமக்கள் தங்கள் பெயர் , தந்தை பெயர் , தொலைபேசி எண் , ஈ-மெயில் முகவரி , நிரந்தர முகவரி , போன்றவை குறிப்பிட்ட பின்பு எவ்வளவு நிதி அளிக்க விரும்புகீற்களோ ? அந்த நிதியை குறிப்பிட்டு இணையதள பணபரிவர்த்தனையை (Credit , Debit card, Rupay card, Visa card) பயன்படுத்தி நிதியை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்கலாம். இதற்கான ரசீதி (Receipt) பதிவிறக்கம் (அல்லது) ஒப்புகை (Acknowledgement No) எண்ணை சேமித்து வைக்கலாம்.
பிரதமரின் நிவாரண நிதிக்கு நிதி அளித்த பின்பு அதற்கான ரசீதி (Receipt )மற்றும் ஒப்புகை எண் (Acknowledgement No) பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு குறுந்தகவல் வரும். நாம் அனுப்பிய நிதியை பிரதமர் அலுவலகம் உறுதி செய்த பின்பு அதற்கான கடிதம் மற்றும் நிதி செலுத்தியதற்கான ரசீதியை பதிவு செய்த முகவரிக்கு தபால் மூலம் பிரதமர் அலுவலகம் அனுப்பும். இதனை நிதி அளித்தோர் "FILE" செய்து வைத்துக்கொள்ளலாம். பிரதமருக்கு நிவாரண நிதியை அளிக்கும் போது "பான் எண்" (PAN CARD) எண்ணை குறிப்பிட்டால் வருமான வரித்துறை சட்டம் 1961 - 80(G) யின் படி பொதுமக்கள் வழங்கப்படும் நிதிக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் நிதி அளித்தற்கான ரசீதியை தொலைத்துவிட்டால் கவலை வேண்டாம். இணையதளம் மூலம் எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதற்கான இணையதள முகவரி :
https://www.pmnrf.gov.in/viewtransactions.php . இந்தியாவில் வாழும் அனைவருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் எப்படி பிரதமர் நிவாரண நிதிக்கு நிதியை அளிப்பது என தெரியாது. எனவே இந்த இணையதளத்தை பயன்படுத்தி நம் மக்களுக்கு அரசுடன் கைக்கோர்த்து உதவிடலாம். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் இது போன்ற இணையதளத்தை விளம்பரங்கள் செய்தால் அனைவருக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இதனை தொடர்ந்து இந்திய இளைஞர்களின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது.
பி.சந்தோஷ் , சேலம் .