அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்று இன்று காலை 10:30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்பு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐவர் குழுவால் வழங்கப்படுகிறது.
![anna univ](http://image.nakkheeran.in/cdn/farfuture/fcKgUPM0nVuArtEtQRVjLHDvvlqpZK78Fz25fFjZyyg/1573273690/sites/default/files/inline-images/anna-univ_0.jpg)
இதன்பொருட்டு உ.பி மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உபி, ராஜஸ்தான், ஜம்முவில் இணையதள சேவையை முடக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனைவரும் நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்காமல் அமைதியாக தீர்ப்பை ஏற்றுச் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாப் பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகள் குறித்து பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி, "அயோத்தி தீர்ப்பு குறித்து அரசிடமிருந்து எந்த உத்தரவும் வரவில்லை. இன்று பல்கலைக்கழகம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும். செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்” என்று கூறியுள்ளார்.