Skip to main content

பூஜை என்ற பெயரில் அர்ச்சகர்கள் பணம் பறிக்கக்கூடாது - ஐகோர்ட் கிளை உத்தரவு

Published on 05/06/2018 | Edited on 05/06/2018
thiruma in

 

கோயிலில் சிறப்பு பூஜைகள் என்ற பெயரில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் பறிக்க கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


  
திருச்செந்தூர் கோயிலில் பணம் வசூலிப்பதாக ராஜபாளையம் ஆர்.எஸ்.கல்யாணசுந்தரம் என்பவரால் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்,   திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் வருகைப்பதிவுக்கு பயோமெட்ரிக் கருவியை பொருத்த வேண்டும். பக்தர்களிடம் இருந்து   பணம் பெறப்படுகிறதா என்பதை கண்காணிக்க அதிகாரிகள் வாரம் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும்.

 

அனைத்து பக்தர்களையும் ஏழை பாகுபாடின்றி ஒரேவிதமாக நடத்த வேண்டும். சட்டபூர்வமாக நியமிக்கப்படாத அர்ச்சகர்கள் பற்றி விழிப்புணர்வு பலகைகள் வைக்க வேண்டும். கோயிலில் சிறப்பு பூஜைகள் என்ற பெயரில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் பறிக்க கூடாது’’ என்று  உத்தரவிட்டனர்.  இந்த உத்தரவுகளை நிறைவேற்றியது பற்றி அறநிலையத்துறை, கோயில் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

 

மேற்கண்ட உத்தரவுகளை பிறப்பித்து இவ்வழக்கை ஜூலை 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

சார்ந்த செய்திகள்