கெளரி லங்கேஷ் படுகொலையை கண்டித்து தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
பெண் பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு மாவட்ட பொருளாலர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றக் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல் மற்றும் கொலை வெறிச்செயல்களை கண்டித்தும், பத்திரிக்கையாளர்களுக்கான பாதுகாப்புச் சட்டம் இயற்றாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், கிராமப் புற ஏழை, எளிய மாணவர்களின் கனவுகளை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
- எஸ்.பி.சேகர்