Skip to main content

விருது பெற்ற அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையா? - பரிதாபமாக இறந்த கர்ப்பிணி

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

Pregnant woman passed away Aranthangi Government Hospital

 

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி வந்த பிறகு மாவட்ட மருத்துவமனையாக அறந்தாங்கி மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. மகப்பேறுகால இறப்புகளே இல்லாத அரசு மருத்துவமனையாக அறந்தாங்கி உள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டி விருது வழங்கினார். ஆனால் தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றம் பெற்ற பிறகு கர்ப்பிணிகள் இறப்பு தொடங்கியுள்ளது. 

 

கடந்த 13 ந் தேதி அரசர்குளம் ஜோதி மீனா (26) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த நிலையில், ஜோதிமீனா உயிரிழந்தார். அதேபோல கூத்தாடிவயல் கிராமத்தைச் சேர்ந்த ராஜலெட்சுமி பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு சுகப்பிரசவம் நடந்த நிலையில் ரத்தப்போக்கு நிற்காததால் புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு கர்ப்பபை அகற்றப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

பிரசவகால இறப்புகளே இல்லாத இந்த அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தரம் உயர்ந்த பிறகு இப்படி இறப்பு கணக்குகள் தொடங்குவது வேதனையாக உள்ளதாகக் கூறும் பொதுமக்கள் இன்று இறப்புக்கு காரணம் தவறான சிகிச்சையா? அப்படியானால் தவறான சிகிச்சை அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் மருத்துவமனை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் தொடங்கியதும் அங்கு வந்த ஜெ.டி. ராமு உள்ளிட்ட அதிகாரிகள் சமாதானப் பேச்சுவாரத்தை நடத்திய பிறகு கோரிக்கைகளை மனுவாக பெற்றுச் சென்றுள்ளனர்.

 

அறந்தாங்கி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டாலும் தேவைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், சிறப்பு பிரிவுகள், உபகரணங்கள் பற்றாக்குறையாகவே உள்ளது. ஒப்பந்தப் பணியில் பல மாதங்களாக சம்பளமே கிடைக்காத ஊழியர்களைக் கொண்டே மருத்துவமனை இயங்கி வருகிறது. அதனால் இது போன்ற சம்பவங்களை தடுக்க அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி சிறப்பு பிரிவுகளை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்