ஆபாச வீடியோக்களில் இடம்பெற்றுள்ள பெண்களை மிரட்டி, அவர்களிடம் இருந்து பெரிய அளவில் பணம் பறிக்கும் காரியத்தில் போலீஸார் ஈடுபட்டிருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின்றன.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் உள்ள 1400 வீடியோக்களில், அடையாளம் காணப்படும் பெண்களை சந்தித்து போலீஸார் மிரட்டுகிறார்கள் என்றும், வீடியோவை பரப்பிவிடுவதாகக்கூறி பணம் பறிக்கும் கேவலமான செயலில் இப்போது காவல்துறையினர் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்துள்ள இந்த விவகாரத்தில், நேற்று மட்டும் 60லட்சம் ரூபாயை ஒரு பெண் காவல்துறையிடம் இழந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் பொள்ளாச்சி பகுதியில் உள்ள 7 கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், பார் நாகராஜனுக்கு சொந்தமான பார் ஒன்றை அடித்து நொறுக்கினார்கள். இதையடுத்து, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கும்படி காவல்துறை சார்பாக கல்லூரி நிர்வாகத்தினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை தவிர, பேருந்து நிலையம், பார் நாகராஜ் வீடு, குற்றப் பிண்ணனி கொண்ட நபர்களின் வீடு, மற்றும் சொத்துகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.