![police protection for chennai pachaiyappas college pongal celebration 2023 issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/6INbMqtuoyA4kkeNYF9IIQsoYcK5YEBl-9mcta9cs6c/1673517285/sites/default/files/2023-01/pachai-1.jpg)
![police protection for chennai pachaiyappas college pongal celebration 2023 issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/gCtcUiBwlDW_adgxfQa70XmrUpWFHCct_4dklVgJTsY/1673517285/sites/default/files/2023-01/pachai-2.jpg)
![police protection for chennai pachaiyappas college pongal celebration 2023 issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/dBqvgp5Y3qdVKKV271PCU4AVCVyljrrh3EF7WaR8vXo/1673517285/sites/default/files/2023-01/pachai-3.jpg)
![police protection for chennai pachaiyappas college pongal celebration 2023 issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/3J7OKkH0FzjduHJ79k2iVyJie6MqTXTgjWORJIFHAR8/1673517285/sites/default/files/2023-01/pachai-4.jpg)
![police protection for chennai pachaiyappas college pongal celebration 2023 issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/Mc5TUqtMTQWmjEHBZAUBVlAmnt9Z03Bt45luOZqffeM/1673517285/sites/default/files/2023-01/pachai-5.jpg)
Published on 12/01/2023 | Edited on 12/01/2023
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்று மாணவ மாணவிகளின் சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாணவர்கள் பாட்டு பாடியும், நடனமாடியும் கொண்டாடினர். அப்போது மாணவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியது. மாணவர்கள் தங்களுக்குள் மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்., மோதலில் ஈடுபட்ட மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். அதனைத் தொடர்ந்து கல்லூரிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் கல்லூரி வளாகம் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.