விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று அங்காள பரமேஸ்வரிக்கு ஊஞ்சல் உற்சவம் விழா பிரமாண்டமாக நடைபெறும். இவற்றைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். விடியவிடிய கூட்டம் அலைமோதும்.
![police officer walked in temple fire](http://image.nakkheeran.in/cdn/farfuture/4f--dhGHJDWzOQq9NZb0E9LUX-KTStBJO_al-Kbknuc/1582789711/sites/default/files/inline-images/11111_120.jpg)
இக்கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இம்முறையும் பக்தர்கள் விரதமிருந்து தீமிதி குண்டத்தில் ஏறி நேற்று பக்தியை வெளிப்படுத்தினர். இந்த தீமிதி திருவிழாவுக்கு ஏகப்பட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த போலீஸ் பாதுகாப்பை பார்வையிட வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான ஜெயக்குமார், போலீஸ் உடையுடன் தீமிதி திருவிழாவில் கலந்துகொண்டு திடீர் என்று தீக்குண்டத்தில் நடந்துசென்று நேர்த்திக்கடன் செலுத்தினார். இதை அங்கிருந்த பக்தர்கள் வியப்புடன் பார்த்தனர்.