Published on 10/08/2021 | Edited on 10/08/2021
![jh](http://image.nakkheeran.in/cdn/farfuture/b6bZPFuZWyk47xU8YB7j2_SuKte9-CJKMYk7soPvyAg/1628567405/sites/default/files/inline-images/20_17.jpg)
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மீது வழக்குப் பதிவுசெய்த அதிகாரிகள், அவரது வீடு, சட்டமன்ற விடுதி உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்துவருகிறார்கள். இந்நிலையில், சென்னையில் உள்ள சட்டமன்ற விடுதியில் இருக்கும் அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். போலீசார், புகார் தொடர்பாக விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.