1000 ஆண்களிடம் பெண் குரலில் பேசி பணம் பறித்த நெல்லை வாலிபர் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம். சென்னை மதுரவாயலைச் சேர்ந்தவர் உதயராஜ். உதயராஜ் வேலைக்காக லோக்நெக்டோ என்ற செயலி மூலம் விண்ணப்பித்துள்ளார். அப்போது ஆபாசமாக உரையாடலாம் எனக் கூறி விளம்பரம் ஒன்று செயலியில் வந்துள்ளது. இவருக்கு அந்த செயலி மூலம் ப்ரியா என்ற பெண் அறிமுகமாகியிருக்கிறார். பின்பு ப்ரியா உதயராஜிடம் ஆபாசமாக உரையாட 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் வீடியோ காலில் பேச 1000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்கு உதயராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வீடியோ காலில் பார்க்க வேண்டும் என்றால் 1000 ரூபாய் செலுத்துமாறு பிரியா கேட்டுள்ளார். இதனால் 1000 ரூபாய் பணப்பரிவர்த்தனை செயலியில் செலுத்திவிட்டு அழைக்கும் போது வர மறுத்துள்ளார்.
அதன்பின் உதயராஜ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி ஒன்று அவருக்கு வந்துள்ளது. அதில் உதயராஜ் நம்பரை பயன்படுத்தி காவல்துறையில் ஆன்லைன் புகார் சென்றதால், போலிசார் உதயராஜை விசாரணைக்கு அழைக்கும் போது தான் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து உதயராஜ்க்கு வந்த செல்போன் அழைப்பை வைத்து போலீசார் ஆய்வு செய்ததில் திருநெல்வேலி பணங்குடி இருப்பிடத்தை செல் சிக்னல்கள் வைத்து கண்டுபிடுத்துள்ளனர். அதன்பின்பு போலீசார் நடத்திய விசாரணையில், உதயராஜிடம் தொலைபேசியில் பெண் குரலில் பேசியவர் நெல்லை மாவட்டம் பணகுடியைச் ராஜ்குமார் ரீகன் என்பது தெரியவந்தது.
பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 1000-க்கும் மேற்பட்ட ஆண்களிடம் பெண்குரலில் பேசி பணம் பறித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ராஜ்குமார் ரீகனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், சேத்துப்பட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது, சபிதா மற்றும் ரூபா என்ற பெண்கள் மூலம் இது போன்று லோகாண்டா செயலியில் பெண்கள் பெயரில் கணக்கு துவங்கி, பெண் போல் பேசி சம்பாதிப்பதை ரீகன் கற்றுக் கொண்டுள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் பல பெண்களின் நிர்வாண போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி, மோசடி வலையில் சிக்கும் ஆண்களிம் ஆபாச உரையாடல்கள், போட்டோக்கள், வீடியோக்கள் பயன்படுத்தி போலிசில் மாட்டிவிடுவேன் என கூறியும், ஆன்லைன் புகார் கடிதத்தை அனுப்பியும் மிரட்டி பணம் பறித்து உள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழகத்தில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பல ஆண்களை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. மேலும் துபாய், மலேசியா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் உள்ள ஆண்கள் இவருடைய பெண் குரலால் ஏமாறியதும் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.