சென்னை மெரினாவில் சுமார் ஆயிரம் எண்ணிக்கையிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மெரினாவில் ஆண்டுதோறும் இலங்கை முள்ளிவாய்க்காலில் 2009-ஆம் ஆண்டு மே 18 இனப்படுகொலை செய்யட்ட லட்சக்கணக்கான தமிழகர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுவந்தது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் இனி மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என 41 எ சட்டப்பிரிவின் படி மெரினாவில் போராட்டம் நடத்த தடை உத்தரவை தமிழக அரசு வாங்கியுள்ளது.
தற்போது நேற்று மே பதினேழு இயக்கமும் மற்றும் வைகோ உட்பட பதினோரு அமைப்புகளை சேர்ந்தவர்களும் நாளை திட்டமிட்டபடி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடக்கும் என அறிவித்திருந்தனர். இதை தொடர்ந்து தற்போது தடை விதிக்கப்பட்ட நிலையில் தடையை மீறி நினைவேந்தல் நடத்தப்படலாம் என்பதால் முன் எச்சரிக்கைக்காக தடுப்பதற்கு சுமார் ஆயிரம் போலீசார் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி தடையைமீறி குவியும் கூட்டத்தை கைது செய்ய சுமார் 20 மாநகர பேருந்துகளும், தடுப்புக்களும் ரெடியாக வைக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பதற்றம் நீடித்துவருகிறது.