
ஆத்தூர் தொகுதியில் பணி நியமன ஆனை பெற்றவர்கள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகையில் நேரில் சந்தித்து பணிநியமன ஆணையை கொடுத்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழகத்தில் திமுக ஆட்சியில் தான் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை தேடி சென்று வழங்குகிறது. ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கலைஞர் ஆட்சியின் போது நூற்றுக்கணக்கானோருக்கு வேளாண்துறையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்பு அதிமுக ஆட்சியில் பத்து வருடங்களாக எந்த ஒரு அரசு வேலைவாய்ப்பும் முறையாக வழங்கவில்லை. கலைஞர் வழியில் வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தான் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருவதோடு ஆதரவற்ற விதவைகள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது.
கடந்த வருடம் ஆத்தூர் தொகுதியில் 115 பேருக்கு நியாயவிலைக்கடைகளில் பணிபுரிவதற்கான வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பின்பு ஓட்டுநர்கள் மற்றும் செவிலியர்களுக்கான பணி நியமனம் வழங்கப்பட்டது. தற்போது ஆத்தூர் தொகுதியில் 9 பேருக்கு துப்புரவு ஆய்வாளருக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றார். பணி நிய மன ஆணை பெற்றவர்கள் பொதுமக்களிடம் அன்பாக நடந்து சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

இதில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, ஆத்தூர் நடராஜன், கிழக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் நாகராஜன், மேயர் இளமதிஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர்கள் திண்டுக்கல் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், திமுக நிர்வாகிகள் அம்பை ரவி, திண்டுக்கல் மாநகர பொருளாளர் மீடியாசரவணன், சட்டமன்ற உறுப்பினர் முகாம் அலுவலக தாசில்தார் நவனீத கிருஷ்ணன், அலுவலர் வடிவேல் முருகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இல.கண்ணன், இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் பாறைப்பட்டி வாஞ்சிநாதன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பண்ணைப்பட்டி அருண் ஜெகநாதன், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பொன் முருகன், அகரம் பேரூராட்சிமன்ற தலைவர் நந்தகோபால், துணை த்தலைவர் ஜெயபால், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்கள் கும்மம்பட்டி விவேகானந்தன், பஞ்சம்பட்டி மணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கோனூர் வெள்ளத் தாய் தங்க பாண்டியன், செட்டியபட்டி ராஜா, பொதுக்குழு உறுப்பினர் அக்பர் அலி, நகர சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் என்.நஜீப், திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர்கள், நெல்லை சுபா ஷ், ஆனந்தன், ஜான் பீட்டர் மற்றும் நரசி ங்கம், வீரபாண்டி, நந்தி நடராஜன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.