ராமநாதபுரம் அருகே திருமணமாகி ஆறு வயது பெண் குழந்தை கொண்ட பெண் ஒருவர் பழைய பள்ளித் தோழியின் மீது காதல் ஏற்பட, அந்த தோழியும் திருநம்பியாக மாறி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை அடுத்த ஆணையூரைச் சேர்ந்த சேர்ந்தவர் சுகன்யா. மதுரை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2007 ஆம் ஆண்டு சுகன்யா பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது அதே பள்ளியில் எப்சியா என்ற தோழி இருந்துள்ளார். இவர்களது நட்பானது செல்லும் இடங்களுக்கு எல்லாம் ஒன்றாக சுற்றும் அளவிற்கு அதிகமானது. பெண்ணாக இருந்த எப்சியா நாளடைவில் அவருக்கு ஏற்பட்ட பாலின மாறுபாடு காரணமாக ஆணாக மாற தொடங்கினார். இதை தெரிந்து கொண்ட சரண்யாவின் பெற்றோர் எப்சியாவிடம் பழகக்கூடாது என்று கண்டித்ததோடு கடந்த 2012 ஆம் ஆண்டு ராமநாதபுரம் கீரைக்காரத் தெருவில் உள்ள ராஜேஷ் என்பவருக்கு சுகன்யாவை திருமணம் செய்து முடித்தனர். ஏழு ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்த நிலையில் சுகன்யாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்து தற்பொழுது அந்த பெண் குழந்தைக்கு ஆறு வயது ஆகிறது.
இப்படிபட்ட சூழலில் சுகன்யாவின் கணவரான ராஜேஷுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு விபத்தின் காரணமாக எழுந்து நடக்க முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இப்படியிருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுகன்யா உறவினர் ஒருவரின் சுப நிகழ்ச்சிக்கு சென்றபோது அங்கு மீண்டும் தனது பள்ளித் தோழியான எப்சியாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நீண்டநாள் பழகிவிட்டு பிரிந்து சென்ற இருவரும் மீண்டும் மனம் விட்டு பேசி ஒருவருக்கு ஒருவர் செல்போன் எண்ணையும் பரிமாறிக் கொண்டனர்.
இதன்மூலம் பழைய நட்பு மீண்டும் தொடர்ந்தது. அப்பொழுது சுகன்யா தனது கணவருக்கு விபத்து நடந்திருப்பதாகவும், இதனால் என்னுடைய வாழ்க்கை சோதனையாகவும், கவலையாகவும் இருப்பதாக சொல்லி அழுதுள்ளார். இதற்கு ஆறுதல் கூற முயன்று எப்சியா கவலைப்படாதே நீ என்னோடு வந்து வீடு நாம் சேர்ந்து புதிய ஒரு வாழ்க்கையைத் தொடங்கலாம் என ஆறுதல் கூறியுள்ளார்.
அவரது ஆறுதல் பேச்சில் மயங்கிய சுகன்யா அவரை திருமணம் செய்துகொள்ள வீட்டை விட்டு வெளியே வந்தார். மேலும் பள்ளி தோழியை கரம் பிடிக்க தனது பெயரை ஜெய்சன் ஜோஸ்வா என்று எப்சியா மாற்றிக் கொண்டார். அதேபோல் அறுவை சிகிச்சைகள் மூலம் தன்னை திருநம்பியாகவும் மாற்றிக்கொண்டு ஆண்கள் அணியும்படியான ஷர்ட், பேண்ட் மற்றும் ஹேர் கட் செய்து ஆணை போலவே தோற்றமளித்தார்.
மதுரையில் உள்ள ஒரு தனியார் மாலில் வரவேற்பாளராக சுகன்யாவும், திருநம்பியான ஜோஸ்வா காவலாளி ஆகவும் பணி செய்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஒன்றாக வசித்து வரும் நிலையில் சுகன்யாவின் வீட்டார் அவரின் மகளின் எதிர்காலத்தை கருதி மீண்டும் திரும்பி வருமாறு சுகன்யாவுக்கு அறிவுறுத்தி உள்ளனர். தன்னுடைய ஆறு வயது குழந்தையை தந்தை வீட்டில் தவிக்க வைத்து விட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று திருநம்பியுடன் வாழ்ந்து வரும் சுகன்யாவை மீட்க அவரது குடும்பத்தினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தனது 6 வயது மகளை தங்களிடம் ஒப்படைக்கும்படி ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்தார் சுகன்யா. இந்தப் புகார் தொடர்பாக இன்று விசாரணைக்காக கேணிக்கரை காவல் நிலையம் வந்த அவரிடம் குடும்பத்தார் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இப்படி கனவனையும், மகளையும் தவிக்க வைத்துவிட்டு பெண் ஒருவர் இப்படி செய்திருப்பது என்ன மாதிரியான மனிதாபிமானம் என்பதுதான் விளங்கவில்லை.