![k](http://image.nakkheeran.in/cdn/farfuture/_CQvK2tTNLwFbWzAE-9CZXuPoGSakqsJLENPtfLA1n0/1612094259/sites/default/files/inline-images/0145.jpg)
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர். ராமதாஸை தமிழக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். வன்னியர்களுக்கு 20% உள் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ம.க.வினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
அதேபோல், தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராமதாஸ் உடன் அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இட ஒதுக்கீடு தொடர்பாக வரும் 3ம் தேதி அரசு அழைப்பு விடுத்திருப்பதை பாமக ஏற்றுக்கொண்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. அந்த கூட்டத்துக்கு பிறகு அரசியல் முடிவு எடுக்கப்படும் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.