Published on 17/10/2020 | Edited on 17/10/2020
![jkl](http://image.nakkheeran.in/cdn/farfuture/rH-x3ypN9ns985GtO99QOaC0599T5e0sAjxQfliZEAs/1602903180/sites/default/files/inline-images/999999999_11.jpg)
பெட்ரோல் டீசல் விலையில் இன்றும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து 16வது நாளாக பெட்ரோல் டீசல் விலை மாற்றப்படாமல் இருந்து வருகின்றது.
கரோனா காரணமாக நாடுமுழுவதும் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப் படாமல் இருந்து வந்தது. ஜூன் மாதத்தில் விலை உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களாக விலை மாறுதலுக்கு உள்ளாகாமல் இருந்து வருகின்றது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் 84.14 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 75.95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.