Published on 01/09/2021 | Edited on 01/09/2021

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் தமிழக அரசு கடந்த 13ம் தேதி பெட்ரோல் விலையை ரூ.3 குறைத்தது. இதன் மூலம் இரண்டு வாரங்களுக்கு மேலாக பெட்ரோல் விலை தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில், இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 99.08 என விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 93.38 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. பெட்ரோல் 12 காசுகளும், டீசல் 14 காசுகளும் நேற்றை விட குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.