கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், கடலூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் கடந்த 5 நாட்களாக வடகிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது.
இதனால் அப்பகுதிகளில் உள்ள ஏரி மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. மேலும் தொடர்மழை காரணமாக மாவட்டத்தில் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம்ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 8ஆயிரம் கனஅடி நீரை பொதுப்பணித்துறையினர் வெளியேற்றி வருகிறார்கள். இதனால் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள திருநாரையூர் லால்பேட்டை, சிறகிழந்த நல்லூர், குமராட்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. வாய்கால் ஓரங்களில் இருக்கும் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இவர்கள் அப்பகுதியில் உள்ள சமுதாயக் கூடம் மற்றும் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளியேறும் தண்ணீரின் அளவை திங்களன்று 4ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளதாக பொதுப்பணித் துறையினர் கூறினர். மேலும் தண்ணீர் அளவு படிப்படியாக குறைக்கப்படும் என்று கூறியுள்ளனர்.