![E1](http://image.nakkheeran.in/cdn/farfuture/S2x_aCON0JtMrU2L0x38oCLSyR5Q3AotnJb1aL2rfdI/1618422432/sites/default/files/2021-04/eps121221212122.jpg)
![E2](http://image.nakkheeran.in/cdn/farfuture/5W1wNUQ0gGMnZ7nV0v9DyTVjKAEKSPIC8hy-RPbMLwo/1618422432/sites/default/files/2021-04/tn4.jpg)
![E3E](http://image.nakkheeran.in/cdn/farfuture/jLKd6a69LBlFg-ZJ7-PPgcoc-y9hueJgA3C_e6LEn-I/1618422432/sites/default/files/2021-04/tn7.jpg)
![E34](http://image.nakkheeran.in/cdn/farfuture/SFWME2S_e-AM6KI2LdShrE8aeSnVacyFs15DiKnN2zA/1618422432/sites/default/files/2021-04/tn1.jpg)
Published on 14/04/2021 | Edited on 14/04/2021
கடந்த 2011-12 ஆம் ஆண்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி இருந்தபோது, மானிய கோரிக்கை எண் 21-ல், அட்டவணை 3.6- பக்கம் 49-ல் குறிப்பிட்டுள்ள பிரகாரம், வரிசை எண் 5-ல் ‘பெரியார் ஈ.வே.ரா. சாலையில்’ என்றே, பணியின் பெயர், அவரால் வாசிக்கப்பட்டது.
இன்றோ, அதே பெரியார் ஈ.வே.ரா. சாலை, அதே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும்போது, ‘கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு’ எனச் சத்தமில்லாமல் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் போன்றோர் கண்டனம் தெரிவித்ததோடு, மீண்டும் 'பெரியார் சாலை' என்றே அறிவிக்கவேண்டும் எனப் போர்க்குரல் எழுப்பி வருகின்றனர்.