Published on 24/12/2019 | Edited on 24/12/2019
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 46வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று ஈரோட்டில் பெரியார் பிறந்த இல்லத்தில் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
![Periyar Memorial Day](http://image.nakkheeran.in/cdn/farfuture/qPWwJl4igbMYhwPuN7PIt2PPNRO4i8rdexphDWZ6o9w/1577183390/sites/default/files/inline-images/11111111111_0.jpg)
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள தந்தை பெரியாரின் முழு உருவ சிலைக்கு இன்று காலையில் தி.க. மண்டலச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஊர்வலமாக வந்து மாலை அணிவிக்கப்பட்டது.
அதேபோல் திமுக மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமையிலும், அதிமுகவினர் எம்.எல்.ஏ., தென்னரசு தலைமையிலும் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல் விடுதலை சிறுத்தை கட்சி உட்பட பல்வேறு கட்சிகள், சமூக நல அமைப்பு நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்