Skip to main content

“மக்களின் குடிநீர் பிரச்சனை ரூ.1000 கோடியில் பணிகள் நடந்து வருகிறது” - அமைச்சர் சக்கரபாணி

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
People's drinking water problem being worked on  Rs.1000 crore says  sakkarapani

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதிகளில் ரூ.10.78 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவுக்கு நகர மன்ற துணைத் தலைவர் வெள்ளைச்சாமி மற்றும் எம்பி வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும் போது, தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைக் கோடி கிராமங்களில் வசிக்கும் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்காக ஒட்டன்சத்திரத்தில் 480 வீடும், கீரனூரில் 430 வீடும் கட்டுவதற்காக அனுமதி வழங்கியுள்ளார்கள். 

ஒட்டன்சத்திரம் பகுதியில் 3 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் ஒட்டன்சத்திரத்தில் கல்லுாரி கட்டடம் கட்டுவதற்கு ரூ.25.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருப்பாட்சியில் தொழிற்பயிற்சி நிலையம் ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. படித்து முடித்த பிறகு போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் காளாஞ்சிபட்டியில் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தினை  தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் திறந்து வைக்க உள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு பொருளாதாரத்தில் வாழ்வாதாரத்தினை இழந்த மக்களுக்கு முதல் கையெழுத்திட்டு வாழ்வாதாரத்தினை இழந்த மக்களுக்கு உதவிடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை வழங்கினார். 

People's drinking water problem being worked on  Rs.1000 crore says  sakkarapani

பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 440 கோடி பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.15 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒட்டன்சத்திரம் பகுதி மக்களுக்கு குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கு ரூ.1000 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு நபருக்கு தினமும் 135 லிட்டர் குடிநீர் வழங்கத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒட்டன்சத்திரத்தில் அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக ரூ.75.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. தலைக்கையன்கோட்டையில் இருந்து பழனி வரை நான்கு வழிச் சாலையில் மின்விளக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள் உயர் கல்வி படிப்பதற்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் ஆண்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு சென்றால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்புதல்வன் திட்டத்திற்கு ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அரசு பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. ஏழை குடும்பங்களைச் சார்ந்த 5 இலட்சம் குடும்பங்களை கண்டறிந்து அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தால் தகுதியுள்ளவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களுக்கு தரமான அரிசி வழங்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது. 

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட நாகணம்பட்டி பெரியாஞ்செட்டிபட்டியில் 5 பணிகள் ரூ.1.44 கோடி மதிப்பீட்டிலும், வார்டு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் 6 பணிகள் ரூ.1.18 கோடி மதிப்பீட்டிலும்,10வது வார்டு பகுதியில் 4 பணிகள் ரூ.6.52 கோடி மதிப்பீட்டிலும், வார்டு 15, 16, 17 மற்றும் 18 ஆகிய பகுதிகளில் 8 பணிகள் ரூ.1.13 கோடி மதிப்பீட்டிலும், 14-வது வார்டு பகுதியில் 3 பணிகள் ரூ.42.20 இலட்சம் மதிப்பீட்டிலும், வார்டு 7, 9 மற்றும் 13 ஆகிய பகுதிகளில் 13 பணிகள் .2.35 கோடி மதிப்பீட்டிலும், வார்டு 1. 4, 5, 6 மற்றும் 8 ஆகிய பகுதிகளில் 16 பணிகள் ரூ.2.62 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 55 பணிகள் ரூ.10.78 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள இன்று(23.02.2024) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர்  ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் சொன்ன வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி ஒரு பொற்கால ஆட்சியை நடத்தி வருகிறார். அவர்களுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்

சார்ந்த செய்திகள்

Next Story

“விடுபட்ட பெண்களுக்கு தேர்தல் முடிந்த பின்பு உரிமைத்தொகை கொடுக்கப்படும்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 missing women will be entitled after the election says Minister sakkarapani

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான சச்சிதானந்தத்தை ஆதரித்து ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள இரண்டு யூனியன்களிலும் அதுபோல் ஒட்டன்சத்திரம் டவுன் பகுதிகளில் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வாக்கு  சேகரித்து வருகிறார்.

ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளில் உள்ள கருவூல காலனி, சம்சுதீன்காலனி, ஆர்எஸ்பிநகர், கேகே நகர், நாகனம்பட்டி, ஆத்தூர், ஏபிபிநகர், சத்யாநகர், தும்மிச்சம்பட்டிபுதூர், தும்மிச்சம்பட்டி, திருவள்ளுவர் சாலை ,நல்லாக்கவுண்டன் நகர், சாஸ்தா நகர், காந்தி நகர் உள்பட 18 வார்டுகளிலும் வேட்பாளர் சச்சிதானந்தத்துடன் திறந்தவெளி ஜீப்பில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

 missing women will be entitled after the election says Minister sakkarapani

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் நகர செயலாளரும், நகர்மன்ற துணைத்தலைவருமான வெள்ளைச்சாமி, நகர்மன்றத் தலைவர் திருமலைசாமி, பூத் ஒருங்கிணைப்பாளர்களான முன்னாள் நகர்மன்றத்தலைவர் கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கே.பாலு, இளைஞரணி துணைஅமைப்பாளர் பாண்டியராஜன் உள்பட கட்சி பொறுப்பாளர்களும்,கவுன்சிலர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். 

அப்போது அங்கங்கே நூற்றுக்கணக்கான பெண்கள் கும்பம் ஆராத்தி தட்டுடன் வேட்பாளரையும், அமைச்சரையும் வரவேற்றனர். அதோடு மாலை, சால்வைகளை அணிவித்து வாழ்த்தும் தெரிவித்தனர். அப்போது 13வது வார்டான தும்மிச்சம்பட்டி புதூரைச்சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவியான செல்வி தான் தனியார் காலேஜில் படிப்பை முடித்துவிட்டேன். ஆனால் அந்த கல்லூரியில் நான் பீஸ் கட்டாததால் என்னுடைய சான்றிதழை தர மறுக்கிறார்கள். அதனால் நான் வேலைக்கு போகமுடியாமல் தவிக்கிறேன். எனக்கு அமைச்சர் உதவி செய்ய வேண்டும் என்றுகேட்டார்.

 missing women will be entitled after the election says Minister sakkarapani

உடனே அமைச்சர் சக்கரபாணியும் கல்லூரி பீஸ் எவ்வளவு கட்டவேண்டும் என்று கேட்டார். அந்த மாணவி தொகையைச் சொன்னதும்  நானே கட்டிவிடுகிறேன் என்றார். 

அதைக்கேட்டு அந்த மாற்றுத்திறனாளி பெண்ணான செல்வி அமைச்சரை இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் அமைச்சர் சக்கரபாணி அப்பகுதியில் பேசும்போது, "இந்த ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு தமிழக முதல்வர் மூன்று கல்லூரிகளை கொடுத்து இருக்கிறார். அதுபோல் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூர் போகும் வழியில் ஐஏஎஸ்-ஐபிஎஸ்க்கான பயிற்சி மையமும் கட்டப்பட்டு தற்போது செயல்பட்டும் வருகிறது. விருப்பாச்சியில் தொழிற்பயிற்சி நிலையமும் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதுபோல் காவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் நூறு கோடி செலவில் கரூரில் இருந்து காவேரி தண்ணீர் ஒட்டன்சத்திரம் நகர் மற்றும் தொகுதி முழுக்கவே கொண்டு வருவதற்கான பணிகள் தற்போது நடந்து கொண்டு வருகிறது.

கூடிய விரைவில் அந்தபணிகள் நிறைவடையும். அதன்மூலம் தொகுதி மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் அளவுக்கு வழி செய்யப்பட்டுள்ளது. அதுபோல் மகளிர் உரிமைத்தொகையும் தொகுதி முழுவதும் கொடுத்து இருக்கிறோம். இதில் விடுபட்டு போய் இருந்தால் அவர்களுக்கு தேர்தல் முடிந்தபின் முழுமையாக கொடுக்கப்படும். நமது கூட்டணி வேட்பாளரான சச்சிதானந்தம் உள்ளூர்காரர். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரக்கூடியவர். மற்ற கட்சி வேட்பாளர் போல் வெளியூர்காரர் இல்லை. அதனால் உங்கள் வாக்குகளை அரிவாள் சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெரும்பான்மையான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்" என்று கூறினார். 

Next Story

“மக்களின் தாகம் தீர்த்திட ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம்” - அமைச்சர் சக்கரபாணி 

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
Joint drinking water project worth one thousand crore to quench says Minister Chakrapani

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.27.45 கோடி மதிப்பீட்டில் பல்வேறு இடங்களில் புதிய திட்டப்பணிகளுக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்க்ல் துறை அமச்சர் சக்கரபாணி அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும் போது, “தமிழ்நாடு முதலமைச்சர்  திண்டுக்கல் மாவட்ட மக்களின் தாகம் தீர்த்திட ரூ.1000 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம், வயதானவர்களின் இல்லம் தேடி மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளிக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், நோய் வரும் முன்பே அவற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வருமுன்காப்போம் திட்டம், மகப்பேறு பெண்களின் நலனைக் காத்திடும் வகையில் மகப்பேறு நிதியுதவித் திட்டம், பொருளாதார நிலையை காரணம் காட்டி பெண்களின் கல்வி கற்றல் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக பெண்கள் கல்வி கற்றலை மேம்படுத்திட புதுமைப் பெண் திட்டம், அனைத்துத் துறைகளிலும் இளைஞர்கள் முதலிடம் பெற வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டம், படித்த இளைஞர்களை தொழில் துறையில் மேம்படுத்திட திறன் பயிற்சி வழங்கும் திட்டம், இல்லத்தரசிகளின் பொருளாதார சுமையை குறைத்து, அவர்களின் பணிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் என எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி கிராம மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி, இந்த அரசு வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், நபார்டு திட்டம், நமக்குநாமே திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கனிமம், 15-வது நிதிக்குழு மானியம் என பல்வேறு திட்டங்களின் கீழ் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கள்ளிமந்தையம் ஊராட்சியில் சிமெண்ட் சாலை, வண்ணக்கல் பதித்தல், ஓரடுக்கு மெட்டல் சாலை, அங்காடி மையம் நியாயவிலை கட்டடம் கட்டுதல் ஆகிய பணிகள் ரூ.2.64 கோடி மதிப்பீட்டிலும், சிக்கமநாயக்கன்பட்டி ஊராட்சியில் சிமெண்ட் சாலை, வண்ணக்கல் பதித்தல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் ரூ.7.35 கோடி மதிப்பீட்டிலும், தேவத்தூர் ஊராட்சியில் சிமெண்ட் சாலை, வண்ணக்கல் பதித்தல், அங்கன்வாடி மையம், நியாயவிலை கடை கட்டடம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் ரூ.1.86 கோடி மதிப்பீட்டிலும், மஞ்சநாயக்கள்பட்டி ஊராட்சியில் சிமெண்ட் சாலை, வண்ணகல் பதித்தல் மற்றும் ஓரடுக்கு மெட்டல் சாலை ஆகிய பணிகள் ரூ.2.57 கோடி மதிப்பீட்டிலும், போடுவார்பட்டி ஊராட்சியில் சிமெண்ட் சாலை, வண்ணக்கல் பதித்தல், அங்கன்வாடி மையம் கட்டடம், கணக்கன்பட்டி ஊராட்சியில் பொட்டம்பட்டி கிராமத்தில் சிமெண்ட் சாலை, எரமநாயக்கன்பட்டி ஊராட்சியில் சிமெண்ட் சாலை, வண்ணக்கல் பதித்தல், அமரபூண்டி ஊராட்சியில் பள்ளிக்கூடத்தான் வலசில் சிமெண்ட் சாலை, வண்ணக்கல் பதித்தல், ஓரடுக்கு மெட்டல் சாலை, நெடுஞ்சாலைத்துறை மூலம் தார்ச்சாலை அமைத்தல், மேலக்கோட்டை ஊராட்சியில் எவிக்சன்நகரில் சிமெண்ட் சாலை, பொதுக்கழிப்பறை, கழிவுநீர் வாய்க்கால், நெடுஞ்சாலைத்துறை மூலம் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் ரூ.5.31 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ள அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மேலும், போடுவார்பட்டி ஊராட்சியில் ஆதிதிராவிடர் காலனியில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், கணக்கன்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை, எரமநாயக்கன்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்ட நிழற்குடை கட்டடம், அமரபூண்டி ஊராட்சியில் கட்டப்பட்ட கலையரங்கம், பொதுச்சாவடி ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன ஆகமொத்தம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் கீழ் ரூ.27.45 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பகுதிகளில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.