கரோனா தொற்று 2ம் அலை மூர்க்கத்தன வேகமெடுக்கிறது. அன்றாடம் தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கைப் பேனல் ஆயிரக்கணக்கில் ஏறிக் கொண்டே போகிறது. அதனைக் கட்டுப்படுத்தவும் கூட்டங்களைத் தவிர்க்கவும் ஏப் 25 அன்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4 மணி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தென் மாவட்டங்களில் முழு ஊரடங்கு கடைப் பிடிக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டமில்லாமலிருந்தது. முழுமையாகக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தென்காசி மாவட்டத்தின் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் பகுதிகளில் முழு ஊரடங்கு. மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகளே மேற்கொள்ளப்பட்டன. இன்று திருமண முகூர்ந்த நாள் என்பதால் நகரில் நடந்த நான்கு திருமண மண்டபங்களின் திருமண நிகழ்ச்சியில் கூட அளவான மக்களையே காண முடிந்தது. நகரில் போலீஸ் காவல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டும் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டது.