![the peoples crowded to get vaccinated](http://image.nakkheeran.in/cdn/farfuture/h3oHwLrRVs8cyhs_cvFOhc0tluk_qWyiSKCxoNQe2eI/1623484930/sites/default/files/inline-images/crowded-people.jpg)
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு 14,300 தடுப்பூசிகள் நேற்று (11.06.2021) வந்தடைந்தன. இன்றுமுதல் திருச்சியில் உள்ள 18 முதல் 44 வயதுடைய நபர்களுக்கும், 45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், திருச்சி மாநகராட்சி பகுதியில் 4 கோட்டங்களில் 18 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஊரக பகுதியில் கீழ்காணும் 14 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இன்று காலை 10.00 மணிமுதல் தடுப்பூசி போடும் பணி துவங்கியது.
மாநகராட்சி பகுதிகள் - பொன்மலை, அரியமங்கலம், கோ-அபிசேகபுரம், ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகம் மற்றும் ஊரகப்பகுதிகள் - நவல்பட்டு, இனாம்குளத்தூர், குழுமணி, சிறுகாம்பூர், புதூர்உத்தமனூர், வளநாடு, புத்தாநத்தம், புள்ளம்பாடி, வையம்பட்டி, தண்டலைப்புத்தூர், மேட்டுப்பாளையம், வீரமச்சான்பட்டி, காட்டுப்புத்தூர், உப்பிலியபுரம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுவருகிறது.
ஒருவார காலத்திற்குப் பிறகு தற்போது தடுப்பூசி போடும் பணி தொடங்கியதால் 4 கோட்டங்களிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து, தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.