கோவை துடியலூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்யவேண்டும் என போராட்டங்கள் எழுந்தநிலையில் அண்மையில் இவ்வழக்கில் கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவனை போலீசார் கைது செய்தனர். அவனும் தான்தான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக ஒப்புக்கொண்டான்.
இந்த வழக்கு தொடர்பாக அவனுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய போலீசார் அவனை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஏற்கனவே பொதுமக்கள் இந்த சம்பவம் காரணமாக கோபத்தில் உள்ளதால் சந்தோஷ்குமார் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என போலீசார் அவன் முகத்தை மறைத்து பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை முடிந்து வெளியே முகத்தை மூடியபடி வந்த கொடூரன் சந்தோஷை பொதுமக்கள் வெறிகொண்டு தாக்குதல் நடத்தினர்.
உடனே காவல்துறையினர் பொதுமக்களை தடுத்து அவனை பாதுக்காப்பாக வண்டியில் ஏற்றினர். ஆனாலும் பொதுமக்கள் பின்னரே மருத்துவமனை வாயில் வரை ஓடி சென்று தாக்க முற்பட்டனர். சந்தோஷ்குமாரை தாக்க வந்த பொதுமக்களை பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் தடுக்க என்ன மேடம் சின்னஞ்சிறு பிஞ்சை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருக்கிறான் அவனை போய் காப்பாத்துறீங்க அவனை கொல்லனும் என ஆவேசப்பட்டு கத்தினர்.
ஆனால் போலீஸ் வாகனம் உடனே சர்ரென்று இடத்தை விட்டு கிளம்பியது. இதனால் கோவை அரசு மருத்துவமனை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.