குமரியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாா்-1, சிற்றாா்-2 அணைகளில் நீா்வரத்து அதிகாித்துள்ளது. மேலும் குளங்கள், கால்வாய்களில் தண்ணீா் நிரம்பி வழிகிறது. இதனால் பாா்க்கிற இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் பெருஞ்சாணி அணை கொள்ளளவை எட்டியதால் இன்று காலை அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சாிக்கை விடப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த பகுதி மக்கள் வேறு இடத்திற்கு இடம் பெயா்ந்தனா்.
இதற்கிடையில் மேலும் மழை அதிகாித்து கொண்டிருந்ததால் அணைகளில் நீா் வரத்து அதிகாித்து கொண்டே சென்றது. இதனால் இன்று மாலை பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது.
இதனால் பெருஞ்சாணியின் கீழ் பகுதியில் புத்தண் அணை அருகே பேச்சிப்பாறை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு ரப்பா் தோட்டம் மற்றும் விளை நிலங்களில் தண்ணீா் புகுந்து அந்த பகுதியில் கடல் போல் காட்சியளிக்கிறது. மேலும் அந்த பகுதியில் வெள்ள பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.