Skip to main content

புத்தாண்டு நள்ளிரவில் கோலம் போடும் போராட்டம்... மக்கள் அதிகாரம் பொறுப்பாளர் கைது!

Published on 31/12/2019 | Edited on 31/12/2019

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த மசோதா, தேசிய மக்கள் தொகை பதிவேட்டை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திற்கு சற்று வித்தியாசமாக கோலம் போடும் போராட்டம் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் திருச்சியில் என்.ஆர்.சி, சி.ஏ.ஏ, என்.பி.ஆர்க்கு எதிரான நள்ளிரவு புத்தாண்டு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மண்டல் ஒருங்கிணைப்பாளர் செழியன் தீடிர் என கைது செய்யப்பட்டுள்ளது போராட்டக்காரர்கள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 New Year's midnight struggle ...makkal athikaram trustee  arrested


கைது செய்யப்பட்ட செழியனை உடனே விடுவிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பை சேர்ந்தவர்கள், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ, என்.பி.ஆர்க்கு எதிராக வீடுகளில் கோலமிட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. என்.ஆர்.சி, சி.ஏ.ஏ, என்.பி.ஆர்க்கு எதிராக புத்தாண்டு தினத்தில் இந்தியா முழுவதும் மக்கள் போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியில் மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் என்.ஆர்.சி, சி.ஏ.ஏ, என்.பி.ஆர்க்கு எதிரான நள்ளிரவு புத்தாண்டு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மண்டல் ஒருங்கிணைப்பாளர் செழியன் 31.12.2019 காலை 10 மணிக்கு அவரது வீட்டில் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த புத்தாண்டு கொண்டாட்டம் என்.ஆர்.சி, சி.ஏ.ஏ, என்.பி.ஆர்க்கு எதிரான எரிமலையாகவே இருக்கும். அடக்குமுறைகளால் போராட்டங்களை தடுக்க முடியாது என்றார்கள் மக்கள் அதிகாரம் அமைப்பினர்.

 

 

சார்ந்த செய்திகள்