டெல்லியில் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கஜா புயல் பாதிப்புகளுக்கான நிவாரணத் நிதியை கோரிய பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஹெலிகாப்டர் மூலம் புயல் சேதத்தை பார்வையிட்டது ஏன். மக்களை நேரில் சந்தித்து சேதங்களை பார்வையிட்டால்தானே உண்மை நிலவரம் தெரியும் என எதிர் கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
சாலை வழியாக சென்று பார்வையிட்டால் முழு சேதமடைந்த பகுதிகளை பார்வையிட முடியாது எனவே முழு சேதங்களை பார்வையிட வேண்டும் என்பதால்தான் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். மேலும் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு சாலைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டதால் ஹெலிகாப்டரில் பயணம் செய்யக்கூடிய நிலை வந்தது எனக்கூறிய எடப்பாடி, சாலை மார்க்கமாக ஆய்வு செய்த ஸ்டாலின் எத்தனை இடங்களை ஆய்வு செய்தார் என கேள்வி எழுப்பினார்.