திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியில், சேலம் - தானிப்பாடி சாலையில் ஃபேன்ஸி ஸ்டோர் வைத்து நடத்திவருகிறார் ராஜேஷ். தொழில் நிமித்தமாக தினமும் திருப்பி செலுத்தும் வகையில் 5 ஆயிரம் ரூபாய் தானிப்பாடியை சேர்ந்த பூபாலன், பவுன்குமார் ஆகியோரிடம் கடன் வாங்கியுள்ளார். தினமும் 50 ரூபாய் என்கிற வகையில் திருப்பி கட்டி வந்துள்ளார்.
கடந்த நான்கு ஐந்து நாட்களாக ராஜேஷ் தண்டல் பணம் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் செப்டம்பர் 19ந்தேதி மாலை தண்டல் பணம் போய் கேட்டுள்ளனர். நேற்றும் தராமல் நாளை தருகிறேன் என்றுள்ளார். இதையே தான் தினமும் சொல்ற எனப்பேச இருவருக்கும் வாக்குவாதம்மாகியுள்ளது. பூபாலன், பவுன்குமார் இருவரும் போதையில் இருந்துள்ளனர். போதையில் ஃபேன்ஸி ஸ்டேர் உரிமையாளர் ராஜேஷ்சை பளார், பளாரென அடித்த பூபாலன், காலில் இருந்த செருப்பை எடுத்தும் அடித்துள்ளார். அக்கம் பக்க கடைக்காரர்கள் வந்து தடுத்து அவர்களை விலக்கிவிட்டுள்ளனர். நாளை வருவேன் பணம் தரலன்னா அவ்வளவு தான் எனக்கூறி சென்றுள்ளனர்.
தொழில் செய்யும் இடத்தில் தன்னை அடித்ததால் அவமானம் தாங்க முடியாமல் ரமேஷ் இன்று செப்டம்பர் 20ந்தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொள்ள முயன்றுள்ளார். அவர் விஷம் அறிந்ததை அறிந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் இருந்து இதுப்பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பூபாலன் மற்றும் பவுன்குமார் ஆகியோர் மீது தானிப்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இன்று செப்டம்பர் 21ந்தேதி காலை இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இச்சம்பவம் தானிப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் இதே தானிப்பாடியில் திமுக இளைஞரணி நிர்வாகி, செல்போன் கடைக்காரரை அடித்து உதைத்த தகவல் வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக தலைமை உடனடியாக அந்த நிர்வாகியை கட்சியை விட்டு நீக்கியது. தற்போது பேன்சி ஸ்டோர் உரிமையாளரை கடனை திருப்பி தரவில்லையென திமுக உறுப்பினராக இருவரும் தாக்கியது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. தானிப்பாடியில் மீண்டும் ஒரு அடிதடி என்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.