Skip to main content

உறங்கிக்கொண்டிருந்த கூலித்தொழிலாளி கொலை... போலீஸ் விசாரணை

Published on 19/01/2022 | Edited on 19/01/2022

 

vDaily wages person passes away

 

கோவை சாய்பாபா காலனி பகுதியில் எம்.ஜி.ஆர். காய்கறி மொத்த மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான சுமை தூக்கும் மற்றும் கூலித் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் பலர் அதே பகுதியில் தங்கி பணி புரிவது வழக்கம்.

 

இந்நிலையில், சாய்பாபா காலனி மார்க்கெட் பகுதிக்கு அருகே உள்ள ஒரு டைல்ஸ் கடையின் வாசலில் படுத்து இருந்த நபர், தலையில் ரத்தம் வழிந்தநிலையில் பிணமாகக் கிடப்பதாக சாய்பாபா காலனி காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சோதனை மேற்கொண்டதில், படுத்திருந்த நபரின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டதில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.

 

தொடர்ந்து நடத்திய விசாரணையில் இறந்தவர் இடிகரை பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் சண்முகம்(50) என்பதும், இவர் காய்கறி மார்க்கெட்டில் கிடைக்கும் வேலைகளைச் செய்து வருவதுடன் காய்கறி லோடு செல்லும் வாகனங்களில் உதவியாளராகச் சென்று வரும் பணியைச் செய்து வந்துள்ளதும் தெரியவந்தது. இவருக்குத் தினமும் மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அதுபோல் நேற்றிரவு மது அருந்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கொலைக்கு யார் காரணம், எதற்காக கொலை செய்யப்பட்டார் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்