Skip to main content

ஏரிக்கரையில் உயிரிழந்து கிடந்த மயில்; வனத்துறை விசாரணை

Published on 09/07/2023 | Edited on 09/07/2023

 

Peacock found dead on the lake shore; Forest Department investigation

 

சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரிக்கரையில் உயிரிழந்து கிடந்த மயில் வனத்துறையினர் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஒரத்தூர் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வாழக்கொல்லை கிராமத்துக்கு அருகே வீராணம் ஏரிக்கரை பகுதியில் நேற்று  மயில் ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து சிதம்பரம் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்து கிடந்த மயிலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக  ஒரத்தூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று(ஜூலை.9) காலை பிரேதப் பரிசோதனை முடிந்தவுடன் மயிலை பாதுகாப்பாக எடுத்து சென்று புதைக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மனைவியை கத்தியால் குத்திய கணவன்; திருப்பத்தூரில் பரபரப்பு!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Husband stabs wife in Tiruppathur

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலப்பட்டு அடுத்த கல்லுகுட்டை பகுதியைச் சேர்ந்த பிரகாசம் மகன் பிரவீன் (32). இவர் சென்னையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகள் நந்தினி (28) என்பவருக்கும் பிரவீனுக்கும் திருமணம் நடைபெற்று குழந்தைகள் ஏதும் இல்லாத நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கணவனிடமிருந்து பிரிந்து நந்தினி தனது அம்மா வீட்டில் தங்கி திருப்பத்தூர் அருகே புதுப்பேட்டையில் இயங்கும் ஸ்ரீராம் பைனான்ஸில் டாக்குமெண்ட் ஸ்டாப்பாக வேலையும் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கணவன் பலமுறை தனது மனைவியை தன்னுடன் வாழ அழைத்தும் வராத காரணத்தினால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த பிரவீன், மனைவி வேலை செய்யும் இடத்திற்கே சென்று தனது மனைவியை தனியாக அழைத்து தன்னிடம் வர அழைத்துள்ளார். ஆனால், மனைவி வர மறுத்து அவமானப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமானவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக மனைவின் உடம்பில் பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார். இதனால் மனைவி அலறி உள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு நந்தினியை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தன் மனைவியை குத்தியதால் கணவன் பிரவீனுக்கும் கையில் காயம் ஏற்பட்டதால் அங்கேயே அமர்ந்திருந்தார். இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் நகர போலீசார் பிரவினை அழைத்து வந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளித்தனர். கருத்து வேறுபாடு காரணத்தால் கணவன் மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

காரில் வைத்து மது விற்பனை; சென்னையில் பகீர்

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Sale of liquor from the car; Bagheer in Chennai

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் திருமண மண்டபம் ஒன்றின் அருகே பட்டப்பகலில் காரில் வைத்து சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதும் அதைப் பொது இடத்தில் வாங்கி சிலர் அருந்துவது தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.